முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்பு மையங்களில் அதிரடி சோதனை: பணியில் இல்லாத 48 பேர் ஊதியம் நிறுத்தி வைப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:33 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்பு மையங்களில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணியில் இல்லாமல் இருந்த 48 பேரின் ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் 89 படிப்பு மையங்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 படிப்பு மையங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 117 தகவல் மையங்களும் உள்ளன. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்களை வருவாய்த்துறையினர் மூலம் கடந்த ஏப்.25-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.

அப்போது படிப்பு மற்றும் தகவல் மையங்களில் அனைத்து மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மொத்தம் 48 பேர் பணியில் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் சம்பளம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இதில் மேற்கண்ட 48 பேருக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →