முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த 6 ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:46 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த 6 ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றனர்.

சிதம்பரம் அருகே கீழநத்தம் கிராமத்தில் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் முன்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 அடி உயரமுள்ள ஸ்ரீசிவகாமசுந்தர், ஸ்ரீமுருகர், ஒன்றடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை, ஒரு அடி உயரமுள்ள மாணிக்காவாசகர், சுந்ததர் ஆகிய 6 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரிலிருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்படும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.