பண்ருட்டி அருகே நகைக் கடையில் 400 கிராம் தங்கம் திருட்டு
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டியில் உள்ள நகைக் கடை ஒன்றில் சுமார் 400 கிராம் தங்கம் திருட்டுப் போயுள்ளது.
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டியில் உள்ள நகைக் கடை ஒன்றில் சுமார் 400 கிராம் தங்கம் திருட்டுப் போயுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (60), இவர் அங்குள்ள கடை வீதியில் நகைக் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றார்.
வியாழக்கிழமை காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் ஷெட்டர் உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் ஷெட்டைரை உடைத்து உள்ளே இருந்த சுமார் 400 கிராம் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாக தெரிய வருகிறது.