செங்கம் அருகே கர்நாட அரசுபஸ் கவிழ்ந்து ஆறுபேர் படுகாயம்.
செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு கர்நாட அரசு பஸ் கவிழ்ந்து ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கர்நாட அரசு பல் நெய்வேலிக்கு
செங்கம் அருகே வியாழக்கிழமை இரவு கர்நாட அரசு பஸ் கவிழ்ந்து ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கர்நாட அரசு பல் நெய்வேலிக்கு சென்றுள்ளது. அப்போது செங்கம் வட்டம் பாய்ச்சல் கிராமம் அருகில் இரவு நேரத்தில் ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிந்துள்ளது. அதில் பயனம் செய்த நெய்வேலியை சேர்ந்த பாலாஜி (32), அஸ்லாம்பாத் (40), சிந்துஜா (25), பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (61), சப்தகிரிபாளையத்தை சேர்ந்த கீர்சநாராயணன் (60), பெங்களூரை சேர்ந்த பஸ் ஓட்டுனர் மரியகவுடா (50) ஆகிய ஆறு நபர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடனடியாக செங்கம் தீயனைப்பு படையினர் விரைந்து மீட்புபணியில் ஈடுபட்டு 108 ஆம்புலன்மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்து பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பாய்ச்சல் போலிஸார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.