முகப்பு
தற்போதைய செய்திகள்

மகனிடம் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் 83 வயது முதியவர் ஆட்சியரிடம் மனு

கடலூர் புதுப்பளையம் மாட்டுபட்டித் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (83). இவரது மகன்கள் தங்கம். காண்ட்ராக்டர். இரண்டாவது மகன் வேம்பு. டிரைவர்.பாண்டுரங்கன் தனது 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள

Updated On : 6 ஆகஸ்ட், 2013 at 5:20 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:37 PM

அரசு உத்தரவிட்டபடி மகனிடமிருந்து ஜீவனாம்சம் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என 83 வயது முதியவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

கடலூர் புதுப்பளையம் மாட்டுபட்டித் தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (83). இவரது மகன்கள் தங்கம். காண்ட்ராக்டர். இரண்டாவது மகன் வேம்பு. டிரைவர்.பாண்டுரங்கன் தனது 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகளை மகன்களுக்கு தான செட்டில்மென்ட் செய்து வைத்தார். பின்னர், தனது மூத்த மகன் தங்கம், தனக்கு மாதம் 3,000 ரூபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என கடலூர் மூத்தகுடி மக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நலன் தொடர்பான வருவாய் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன்படி தங்கம், தந்தை பாண்டுரங்கனுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த ஜீவனாம்ச தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடவேண்டும் என பாண்டுரங்கன் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர், முதியவர் பாண்டுரங்கனுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.ஆனால், ஜீவனாம்ச தொகையை மகன் தர மறுத்ததால், தனக்கு ஜீவனாம்ச தொகை பெற்றதர வேண்டும் எனவும், அப்படி தராத பட்சத்தில் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த எஸ்பி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.