முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டிபணம் பறித்த ரவுடி கைது

விருதுநகர் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2200 வழிப்பறி செய்த ரவுடியை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 6 ஆகஸ்ட், 2013 at 11:07 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:37 PM

விருதுநகர் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2200 வழிப்பறி செய்த ரவுடியை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    விருதுநகர் அருகே கட்டனார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்கனி(47). இவர் திங்கள்கிழமை இரவு கன்னிசேரி கால்நடை மருத்துவமனை அருகே அவரது கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த எட்வர்ட்ராஜ் என்பவரின் மகன் ரவுடி துரட்டி பாண்டி(43) என்பவர் வழிமறித்து மது குடிப்பதற்கு பணம் கேட்டாராம். அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததை அடுத்து,   முதுக்கு பின்புறம் மறைந்து வைத்திருந்த பட்டாகத்தியைக் செல்வக்கனியின் கழுத்தில் வைத்து சட்டைப் பையில் இருந்த ரூ.2200 வழிப்பறி செய்துள்ளார்.

    அப்போது, கொலை செய்வதாக மிரட்டியதால் பயந்து சத்தம் போட அருகில் இருந்தவர்கள் தடுக்க வந்தனர். அப்போது, அவர்களை பார்த்து கத்தியை சுழற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கடையை அடைத்து ஓடினார்களாம். இது தொடர்பாக செல்வக்கனி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் துரட்டி பாண்டி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.