வி.கே. புரத்தில் குளத்தில் மணல் அள்ளியபோது சரிந்து தொழிலாளி சாவு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் குளத்தில் மணல் எடு்த்தபோது மணல் திட்டு சரிந்து தொழிலாளி புதன்கிழமை மு. செல்வகுமார் (38) சிக்கி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் குளத்தில் மணல் எடு்த்தபோது மணல் திட்டு சரிந்து தொழிலாளி புதன்கிழமை மு. செல்வகுமார் (38) சிக்கி இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம் வடக்கு மேட்டுதங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் (38). கூலித் தொழிலாளயான செல்வகுமார் சைக்கிளில் சாக்கு பையில் மணல் விற்பனை செய்து வந்தார். தனது வீட்டின் அருகில் உள்ள தொந்தி குளத்தில் இருந்து செல்வகுமார் சாக்குப் பையில் மணல் எடுத்து விற்பனை செய்து வந்தாராம் புதன்கிழமை இக்குளத்தில் ஒரு பகுதியில் செல்வகுமார் குழி தோண்டி மணல் எடுத்து கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக மணல் திட்டு சரிந்து செல்வகுமார் மீது விழுந்தது. இதில் சிக்கிய செல்வகுமார் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
இறந்த செல்வகுமாருக்கு பேச்சியம்மாள், ராணி ஆகிய 2 மனைவிகளும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். விக்கிரமசி்ங்கபுரம் போலீஸார் செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.