முகப்பு
தற்போதைய செய்திகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இக்கோயில் அர்ச்சுனா நதியும் வைப்பாறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.

Updated On : 9 ஆகஸ்ட், 2013 at 2:49 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:40 PM

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இக்கோயில் அர்ச்சுனா நதியும் வைப்பாறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.

இக்கோயில் அருகே இருக்கன்குடி நீர்தேக்க அணையின்,காசிவிஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை 10மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடியேற்றவிழாவில் கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் இராமமூர்த்தி பூசாரி, கோயில் செயல் அலுவலர், உதவி ஆணையர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத் திருவிழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடியேற்ற திருவிழாவிற்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்காணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து, பொங்கல் வைத்து,மொட்டை எடுத்தல், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்தல் ஆகிய நேர்த்தி கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். இக்கோயிலில் ஆடித்திருவிழா ஒருவாரம் நடைபெறும்.

Advertisement

வரும் 16ம் தேதி  வெள்ளிக்கிழமை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. இந்த ஆடித்திருவிழாவிற்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டடுள்ளது.இத்திருவிழாவிற்காக இரண்டு காவல்துறை துணை கண்கானிப்பாளர் தலைமையில், 20 காவல் ஆய்வாளர்கள்,40 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஊர்காவல் படை 200 பேர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.