முகப்பு
தற்போதைய செய்திகள்

வழக்குரைஞரை கைலியுடன் போலீஸார் அழைத்துச் சென்ற விவகாரம்: நடுவர் மன்றத்துக்கு பூட்டு போடும் போராட்டம்

வழக்கு ஒன்றில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறி வழக்குரைஞர் ஒருவரை வீட்டில் இருந்து கட்டிய கைலியுடன் போலீஸார் அழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர் சங்கத்தினர் நீதித்துறை நடுவர்மன்றத்துக்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

வழக்கு ஒன்றில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறி வழக்குரைஞர் ஒருவரை வீட்டில் இருந்து கட்டிய கைலியுடன் போலீஸார் அழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர் சங்கத்தினர் நீதித்துறை நடுவர்மன்றத்துக்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி குற்றவியல் நடுவர் மன்றம் 1ல் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வழக்குரைஞர் சோமசுந்தரம் என்பவர், புதுக்கோட்டை அருகே நடந்த விபத்து வழக்கில், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக நீதிமன்ற ஊழியர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் பிணை ரத்து செய்யப்பட்டதால், குற்றவியல் போலீஸார் அவர் வீட்டுக்குச் சென்று கட்டிய கைலியுடன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து போலீஸாரைக் கண்டித்து நீதிமன்றத்துக்கு வழக்குரைஞர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து தொடர்புடைய நீதிமன்ற நடுவர் கதிரேசன் வழக்குரைஞர்களிடம்  தலையிட்டு சமாதானம் செய்து, முற்பகல் 11.30க்கு நீதிமன்றத்தைத் திறந்தார். இதை அடுத்து சமதானம் அடைந்த வழக்குரைஞர் சங்கத்தினர், வரும் செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடவதாகத் தெரிவித்தனர். இதனை வழக்குரைஞர் சங்கத்  தலைவர் செங்குட்டுவன் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.