ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன் கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு அரசலூர் அருகே அனுமன்பள்ளி என்ற இடத்தில் குடியிருக்கும் பழனிச்சாமி என்பவர் அவரது மனைவியுடன்
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன் கணவன் மனைவி தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு அரசலூர் அருகே அனுமன்பள்ளி என்ற இடத்தில் குடியிருக்கும் பழனிச்சாமி என்பவர் அவரது மனைவியுடன் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அனுமன்பள்ளி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 13 வருடங்களாக அவர்கள் குடியிருக்கின்றார்களாம். எனவே
அந்த இடத்தை தங்களுக்கு பட்டா போட்டுத் தரும்படி அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், சுமார் 30 பேருக்கு புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டுத் தந்தபோது, வேறு ஒருவருக்கு பட்டா போட்டுக் கொடுத்துள்ளனர் என்று கூறி அவர்கள் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். போலீஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் காலை நேரம் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.