முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும்: மாணவர் காங்கிரஸ் தலைவர் எம்.சுனில்ராஜா

மாணவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் எதிர்காலத்தில் ஊழலற்ற, நியாயமான ஆட்சி அமையும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் எம்.சுனில்ராஜா

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:12 PM
பகிர்:

மாணவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் எதிர்காலத்தில் ஊழலற்ற, நியாயமான ஆட்சி அமையும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் எம்.சுனில்ராஜா தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று வருகை தந்த மாணவர் காங்கிரஸ் தலைவர் எம்.சுனில்ராஜா செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: தமிழகத்தில் மாணவர்களிடம் அரசியல் ஆர்வம் குறைவாக உள்ளது. ஒரு சில மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் அதை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தி விடுகிறது. இதனால் மாணவர்களிடம் தலைமைப் பண்பு வளர முடியாமல் போய்விடுகிறது. இன்றைய சூழலில் தலைமைப் பண்பு வளர்த்து கொண்டு மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் நாளைய தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. திராவிடக் கட்சிகள் ஆட்சியில் மாணவர்கள் மது, போதைக்கு அடிமையாகும் நிலையில் உள்ளனர். எனவே மாணவர்களை அரசியலுக்கு வர வாய்ப்பு அளிக்க வேண்டும் என சுனில்ராஜா தெரிவித்தார்.

பின்னர் அவர் நிர்வாகிகளுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா மற்றும் பதிவாளர் (பொறுப்புஃ என்.பஞ்சநதம் ஆகியோரை சந்தித்து மாணவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அம்மனுவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை இந்த ஆண்டு முதல் அரசு ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்பு தனியாக் பல்கலைக்கழகமாக இருந்த போது கடந்த கல்வியாண்டுகளில் வருகைப் பதிவேடு 50 சதவீதம் முதல் உள்ள மாணவர்கள் அதற்குரிய அபராதத் தொகையை கட்டி தேர்வெழுதி அடுத்த ஆண்டு தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அரசு நிர்வாகத்தின் கீழ் வந்து பின்னர் புதிதாக ஒரு விதிமுறையை கொண்டு வந்து வருகை பதிவேடு குறைவாக உள்ள மாணவர்கள் இந்த கல்வியாண்டில் தொடர்ந்து படிக்க இயலாது என உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்கால நலனை பாதிக்கும். எனவே வருகை பதிவேடு 50 சதவீதத்திற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு அபராதம் விதித்து, அவர்கள் தேர்வு எழுதி அனுமதித்து அடுத்து ஆண்டு தொடர்ந்து பயில நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதால் மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

சுனில்ராஜாவுடன் முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர் கலையரசன், மாவட்டத் தலைவர் மணிகண்டன், முதன்மை பொதுச்செயலாளர்கள் கிஷோக்குகன், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைவர் வின்சன்ட் பால்ராஜ் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →