அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுதந்திரதின விழா! நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்
அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்து என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்து என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் விழாவில் 81 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.17.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை மற்றும் ஆதரவு ஊதியத்தை வழங்கிப் பேசினார். விழாவில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், ஸ்ரீமாலினி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் மற்றும் புல முதல்வர்கள், ஆசிரியர், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.