முகப்பு
தற்போதைய செய்திகள்

8 கிராம் தங்கத்தில் தாஜ்மஹால், 3 கிராமில் தங்க ஊஞ்சல்: சிதம்பரம் இளைஞர் சாதனை

சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் ஜெயபால் பத்தர். விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இவரது மகன் ஜே.முத்துக்குமரன் (32). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 12 வயதிலிருந்து தந்தையுடன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

சிதம்பரத்தில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 8 கிராம் தங்கத்தில் சிறிய தாஜ்மஹாலையும், 3 கிராம் தங்கத்தில் தங்க ஊஞ்சலையும் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவில் வசிப்பவர் ஜெயபால் பத்தர். விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த இவரது மகன் ஜே.முத்துக்குமரன் (32). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அந்த அனுபவத்தினால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகை மற்றும் பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தற்போது 8 கிராம் 200 மில்லி தங்கத்தில் ஒன்றரை இன்ச் அளவிலான தாஜ்மஹாலை அழகாக வடிவமைத்து தத்ரூபமாக தயாரித்துள்ளார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட நாட்கள் 25 நாட்கள். இதன் மதிப்பு ரூ.22ஆயிரம் என்கிறார் முத்துக்குமரன். மேலும் அவர் கூறுகையில் சமீபத்தில் பக்தர் ஒரு வேளாங்கண்ணி கோயிலுக்கு வேண்டுதலாக காணிக்கை செலுத்த கோரியதின் பேரில் 3 கிராம் தங்கத்தில் அழகிய வடிவில் தங்க ஊஞ்சல் ஒன்றை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர் 2010 ஆண்டு 840 மில்லி கிராம் தங்கத்தில் மின்விசிறி (240 மில்லி), மண்வெட்டி (140 மில்லி), அரிவாள் (30 மி), கைவிசிறி (20 மி), சிறிய தாலி (100 மி), பெரிய தாலி (150 மி), மோதிரம் (40மி), தாலிபொட்டு (40 மி), தாலிகுண்டு (180 மி) ஆகிய 9 வகை நகை மற்றும் பொருள்களை தயாரித்துள்ளார். அத்துடன் 13 கிராம் வெள்ளியில் அடிபம்பு ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த அடிபம்பை அடித்தால் தண்ணீர் வரும் அளவில் அழகாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →