மாவட்ட கண்காணிப்பாளர் பண்ருட்டி காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு
பண்ருட்டியில் கொலை, கொள்ளை மற்றும் சிறு சிறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பண்ருட்டியில் கொலை, கொள்ளை மற்றும் சிறு சிறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இரண்டு வாரங்களாக பண்ருட்டி நகரப் பகுதியில் சுமார் 6 கடைகள் உடைத்து திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. மேலும், மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் மற்றும் வழிப்பறி ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும், குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இத் தொடர் சம்பவங்களின் எதிரொலியாக, மாவட்ட கண்காணிப்பாளர் ராதிகா பண்ருட்டி காவல்நிலையத்துக்கு இன்று காலை திடீரென வந்தார். அப்போது டிஎஸ்பி கிருஷ்ணசாமி, ஆய்வாளர் சிவசுப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலவரம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.