முகப்பு
தற்போதைய செய்திகள்

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறில் தீக்குளிப்பு: தீயில் சிக்கி சிறுவன் பலி;மேலும் நான்கு பேர் படுகாயம்

ஆலங்காயத்தில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறில் தீக்குளிப்பு. தீயில் சிக்கி சிறுவன் பலி. மேலும் நான்கு பேர் படுகாயம்.

தற்போதைய செய்திகள்

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறில் தீக்குளிப்பு: தீயில் சிக்கி சிறுவன் பலி;மேலும் நான்கு பேர் படுகாயம்

ஆலங்காயத்தில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறில் தீக்குளிப்பு. தீயில் சிக்கி சிறுவன் பலி. மேலும் நான்கு பேர் படுகாயம்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:17 PM
பகிர்:

ஆலங்காயத்தில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறில் தீக்குளிப்பு. தீயில் சிக்கி சிறுவன் பலி. மேலும் நான்கு பேர் படுகாயம்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம்-அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (40) கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது 32). இவர்களுக்கு ஜனனி(15), கோகுல்(13) மற்றும் காமேஷ்(10) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வெங்கடேசனின் தங்கை வெளியூர் சென்றதால் அவரதுமகன் ஹிரிபிரசாந்த்(வயது 5)தனது வீட்டில் தங்க வைத்தார்.

கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து மனமுடைந்த சுப்புலட்சுமி வீட்டிலிருந்த மண்ணெணைய் தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் மனைவி காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் தீ பரவியது. மேலும் தீ மளமளவென படுக்கை மற்றும் துணிமணிகளிலும் பரவியதால் அறையில் இருந்த கோகுல், காமேஷ், ஹரிபிரசாந்த ஆகியோரும் தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களது கூச்சல் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த வெங்கடேசனின் மற்றொரு மகளான ஜனனி மற்றும் அவரது பாட்டியும் கூச்சலிட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக தீக்காயமைடந்த ஐந்து பேரையும் வாணியம்பாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைகாக ஐந்து பேரும் வேலூர் அரசு மருத்துவனையிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆயினும் வெங்கடேசனின் தங்கை மகன் ஹரிபிரிசாந்த்(5) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் படித்து வந்தார். தீயில் கருகிய மற்ற நான்கு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →