ஈரோடு அருகே தறிகெட்டு ஓடிய கார்: பைக்கில் சென்ற இளம் தம்பதி உள்பட 3 பேர் பலி
ஈரோடில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார், வண்ணான்காட்டுவலசு பகுதியில் சென்றபோது, சைக்கிளில் சென்ற அந்தப் பகுதியை அடுத்த சதுரம்பட்டியைச் சேர்ந்த பாலிடெக்னிக் 3ம் ஆண்டு பயிலும் மாணவர் வெங்கடேசன் (18) மீது கார் மோதியது. இதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு அருகே தற்கெட்டு ஓடிய கார் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் தம்பதி உள்பட 3 பேர் பலியாயினர்.
ஈரோடில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார், வண்ணான்காட்டுவலசு பகுதியில் சென்றபோது, சைக்கிளில் சென்ற அந்தப் பகுதியை அடுத்த சதுரம்பட்டியைச் சேர்ந்த பாலிடெக்னிக் 3ம் ஆண்டு பயிலும் மாணவர் வெங்கடேசன் (18) மீது கார் மோதியது. இதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் கட்டுப்பாடின்றி அந்த கார், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் தம்பதி செந்தில்குமார் (25), சித்ரா (22) ஆகியோர் மீது மோதியது. இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் தனியார் கல்லூரியில் வேலைக்குச் சென்றனராம். இதில், அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கே சிகிச்சையின் போது இருவரும் உயிரிழந்தனர்.
காரும் சாலை ஓரத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்தவர், கார் யாருடையது என்பது குறித்து, ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.