முகப்பு
தற்போதைய செய்திகள்

கடல்வழியாக புதிதாக ஊருக்குள் வந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவும்: கியூ பிரிவு டிஎஸ்பி

சிதம்பரம் அருகே கடலோர கிராமமான சாமியார்பேட்டையில் கடலோர பகுதி பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிராமத் தலைவர் வீரப்பன் தலைமை வகித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:21 PM
பகிர்:

கடல்வழியாக ஊடுருவி ஊருக்குள் யாராவது வந்தால் உடன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கியூ பிரிவு டிஎஸ்பி ஞானவேலு தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே கடலோர கிராமமான சாமியார்பேட்டையில் கடலோர பகுதி பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கிராமத் தலைவர் வீரப்பன் தலைமை வகித்தார். கடலூரோ பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காவல்துறை கியூ பிரிவு டிஎஸ்பி ஞானவேலு பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடப்பவோதாக தகவல் வந்துள்ளது. எனவே கடலோர பகுதியில் புதிதாக யாராவது படகில் வந்தாலோ அல்லது நடமாடினாலோ உடனடியாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் விலாசம் உள்ள அடையாள ஆவனங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என டிஎஸ்பி ஞானவேலு தெரிவித்தார்.

புதுச்சேரி கப்பல்படை கமாண்டிங் அதிகாரி சுபாஷ்சந்திரா பங்கேற்று பேசினார். அவர் பேசுகையி்ல் "தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை" என சுபாஷ்சந்திரா தெரிவித்தார். கூட்டத்தில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், மீன்வளத்துறை ஆய்வாளர் சுகுமார், சுங்கத்துறை அதிகாரி, கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வம், வீரபாண்டியன், இளங்கோவன், வெங்கடேசன், சந்திரசேகரன், ஆளவந்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் நன்றி கூறினார். கூட்டத்தில் சாமியார்பேட்டை, தா.சோ.பேட்டை, முடசல்ஓடை உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →