முகப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரசும், பாஜகவும் தேமுதிகவின் முடிவை எதிர்பார்க்கின்றனர்: ஆரணி எம்.எல்.ஏ.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக காங்கிரசும், பாஜகவும் தேமுதிகவின் முடிவை எதிர்பார்த்து உள்ளது என்று செய்தியாளர்களிடம் தேமுதிக சேர்ந்த ஆரணி எம்எல்ஏ ஆர்.எம்.பாபுமுருகவேல்

Updated On : 24 ஆகஸ்ட், 2013 at 3:37 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:51 PM

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக காங்கிரசும், பாஜகவும் தேமுதிகவின் முடிவை எதிர்பார்த்து உள்ளது என்று செய்தியாளர்களிடம் தேமுதிக சேர்ந்த ஆரணி எம்எல்ஏ ஆர்.எம்.பாபுமுருகவேல் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தேமுதிகவின் கூட்டணி குறித்த முடிவை எதிர்பார்க்கிறது. தேமுதிக கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் விஜயகாந்த் இலங்கை பிரச்சினை தீரும் வரை பிறந்த நாள் கொண்டாடமாட்டேன் என்று 1983ம் ஆண்டு அறிவித்து இன்று வரை கொண்டாடவில்லை. கட்சி ஆரம்பித்தவுடன் கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற குறிக்கோளுடன் கட்சி தொண்டர்கள்தான் கொண்டாடி வருகின்றனர்.

19 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பிக்கான தேர்தல் நடந்தது இல்லை. தேமுதிக கட்சியால் இம்முறை தேர்தல் நடைபெற்றது. அரசியலில் தேமுதிக தவிர்க்க முடியாத கட்சி என்பதை நிரூபித்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலிலும், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிகவிற்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்த நாளில் 65 லட்சம் மதிப்புள்ள 100 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர டிவிஎஸ் மொபட்டுகள் வழங்கப்படுகிறது. தேமுதிக கட்சியில் உள்ள 52 மாவட்ட செயலர்கள் மூலம் மாவட்டம் தோறும் நலதிட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும் வேலூர் மாவட்டத்திலுள்ள நெமிலி ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்குகின்றேன். இவ்வாறு ஆரணி தேமுதிக எம்எல்ஏ பாபுமுருகவேல் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.