தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் வெளிமாநில இளைஞர் பிடிபட்டார்
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் அடையாளம் தெரியாத வெளிமாநில இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு சுற்றித் திரிவதாக தெர்மல்நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து, போலீஸார் துறைமுகப்
தூத்துக்குடி வஉசி துறைமுகம் பகுதியில் சனிக்கிழமை இரவு சுற்றித் திரிந்த வெளிமாநில இளைஞரை பிடித்து போலீஸாஆர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் அடையாளம் தெரியாத வெளிமாநில இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இரவு சுற்றித் திரிவதாக தெர்மல்நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து, போலீஸார் துறைமுகப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வாய்பேச முடியாதவர் என தெரிய வந்தது. மேலும், அந்த இளைஞர் தனது பெயர் சந்தீப் என எழுதி காண்பித்தாராம்.அவரிடம் சோதனை நடத்தியதில் சில வங்கி ஏடிஎம் கார்டுகளும், விமான பயணச் சீட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக துறைமுகப் பகுதியில் சுற்றித் திரிந்தார் என்பது குறித்து தெர்மல்நகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.