22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அண்ணாமலைப் பல்கலை முன்னாள் மாணவர்கள்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல்துறையில் 1989-91 ஆண்டு பயன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 22 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. சந்திப்பு நிகழ்ச்சியில்
அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல்துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல்துறையில் 1989-91 ஆண்டு பயன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 22 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞானி இளங்கோவன், குஜராத்தில் உள்ள விஞ்ஞானி ஆஸ்வின், கேரளாவில் உள்ள பேராசிரியர் அனில்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் துணைவியார் அங்கையர்கன்னி, அண்ணாமலைப் பல்கலை. இணைப் பேராசிரியர் டி.தனவேல், சீத்தாராமன், இளங்கோவன் உள்ளிட்ட 56 பேர் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்களது கல்லூரி கால நினைவுகளையும், தற்போதைய நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு துறைத் தலைவரும், அறிவியல் புல முதல்வருமான ரா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் முனைவர் சுப்பிரமணியன், முனைவர் வேம்பு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்ததுரையாற்றினர்.