வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதி சப்-இன்ஸ்பெக்டர் கால்முறிவு
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அன்பழகன். இவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எஸ்.பி.கோயில் தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் உசூப்பூரைச் சேர்ந்த அருண்ராஜ் (22), விமல்குமார் (21), முத்துக்குமார் (21), தினகர் (22) ஆகிய நால்வர் வந்துள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லும் போது, நிறுத்தாமல் அவர் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகனுக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.