முகப்பு
தற்போதைய செய்திகள்

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு: பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சம் பாபநாசம் அணையில் 98 மி.மீ,  பாபநாசம் கீழ் அணையில் 140 மி.மீ மழையும் பெய்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:05 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சம் பாபநாசம் அணையில் 98 மி.மீ,  பாபநாசம் கீழ் அணையில் 140 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதை தொடர்ந்து தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகள் நீர்பிடிப்பு பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, நான்குனேரி, சிவகரி உள்பட பரவலாக மழை பெய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மி.மீட்டரில்): பாபநாசம் அணையில் 98, பாபநாசம் கீழ் அணையில் 140, சேர்வலாறு அணையில் 64, மணிமுத்தாறு அணையில் 67.2, கடனாநதி அணையில் 11, ராமநதி அணையி்ல 4, கருப்பாநதி அணையில் 11, குண்டாறு அணையில் 3, வடக்குபச்சையாறு அணையில் 19.6, நம்பியாறு அணையில் 26, கொடுமுடியாறு அணையில் 17, அடவிநயினார் அணையில் 3. பலத்த மழை: அம்பாசமுத்திரத்தில் 65.3 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 59.4 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 15.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 52 மி.மீ மழையும், நான்குனேரியில் 42 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 11 மி.மீ மழையும், திருநெல்வேலியில் 12.1 மி.மீ மழையும், சங்கரன்கோவிலில் 5 மி.மீ மழையும், செங்கோட்டையில் 6.2 மி.மீ மழையும், தென்காசியில் 8.8 மி.மீ மழையும், சிவகிரியில் 7 மி.மீ மழையும், வீரகேரளம்புதூரில் 6 மி.மீ மழையும் பெய்துள்ளது.

அணைகள் மூடல்: நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததை அடுத்து பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2203.59 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1020 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு: பாபநாசம் கீழ் அணையில் 140 மி.மீ மழை பெய்ததை அடுத்து தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் 3,000 கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் ஆற்றில் சென்றதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →