தற்போதைய செய்திகள்

திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் சரகம், காட்டுப்பிரிங்கியத்தைச் சேர்ந்த சுசிலா மகள் குறளரசி(20). இவர் அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் மணிவண்ணனை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு

மீனாட்சி

அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் சரகம், காட்டுப்பிரிங்கியத்தைச் சேர்ந்த சுசிலா மகள் குறளரசி(20). இவர் அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் மணிவண்ணனை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவ,26 ஆம் தேதி இரவு கணவர் வீட்டிலிருந்த குறளரசி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றாராம். அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் குறளரசி திங்கள்கிழமை (டிச.2) இரவு உயிரிழந்தார். இது குறித்து கயர்லாபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் வழக்குப் பதிந்தார். மேலும் குறளரசிக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் அவர் வரதட்சிணை காரணமாக இறந்தாரா என்று  திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT