கருணாநிதியை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி
திமுக தலைவர் கருணாநிதியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை சந்திக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை சந்திக்கிறார்.
இன்று மாலை 5.30க்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு அவர் வரவுள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தெலங்கானா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரி அவர் சென்னைக்கு இன்று வந்துள்ளார். இன்று மதியம் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார்.