முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் மதுபானக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு

சிதம்பரம் பஸ்நிலைய நுழைவில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் சங்கர், விற்பனையாளர் செந்தில்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

சிதம்பரம் பஸ்நிலையம் நுழைவில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரூ.1200 திருட்டு போனது.

சிதம்பரம் பஸ்நிலைய நுழைவில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் சங்கர், விற்பனையாளர் செந்தில்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கடை பூட்டிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் மர்மநபர்கள் கடை பூட்டு உடைத்து உள்ளே புகுந்து ரூ.1200 ரொக்கத்தை திருடிச் சென்றனர். கடையின் உள்ள பாதுகாப்பு பெட்டியை உடைக்க முடியாததால் அதிலிருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் தப்பியது. இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.