முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதி: இல. கணேசன்

வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள பாஜக, தமிழகம் முழுவதும் வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற பாதயாத்திரையை

Updated On : 7 டிசம்பர், 2013 at 7:48 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:39 AM

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள பாஜக, தமிழகம் முழுவதும் வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற பாதயாத்திரையை நடத்தி வருகிறது.தாம்பரத்தை அடுத்த மேடவாக்கத்தில் பாத யாத்திரை மேற்கொண்ட இல. கணேசன் வீடு வீடாகச் சென்று, நரேந்திர மோடி பிரதமராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

Advertisement

வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற பாத யாத்திரையை கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கினோம். இந்த யாத்திரைக்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

மோடி பிரதமராக வேண்டும் என்பதில் எங்களைவிட மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். மோடியை அறியாதவர் எவரும் இல்லை. எனவே, தமிழகத்திலும் பாஜக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கு அதிகமாகவே கிடைக்கும். எனவே, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்க வேண்டிய தேவை இருக்காது என்றார் இல. கணேசன்.

நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்குச் சென்ற இல.கணேசன், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.