முகப்பு
தற்போதைய செய்திகள்

வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் காயம்

தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மதுராபுரி விலக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐய்ப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழந்ததில் 22 பேர்

Updated On : 7 டிசம்பர், 2013 at 5:25 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:39 AM

தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் மதுராபுரி விலக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஐய்ப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழந்ததில் 22 பேர் காயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே நகர்மன்னார்குடியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். விருத்தாச்சலம் அருகே கருநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபு(35) என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில், மதுராபுரி விலக்கு அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்ய ஐயப்ப பக்தர்கள் தர்மராஜ், சாமித்துரை, பெரியசாமி, வெள்ளையன், வேன் ஓட்டுநர் கோபு உள்பட 22 பேர் காயமடைந்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.