பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
தருமபுரி அருகே கெட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகாமி(65(). இவர் திங்கள்கிழமை கெட்டுப்பட்டியிலிருந்து தருமபுரிக்கு செல்ல நகரப்பேருந்தின் முன் படிக்கட்டில் ஏறினாராம். அப்போது,
தருமபுரி அருகே பேருந்து சக்கரத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தருமபுரி அருகே கெட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகாமி(65(). இவர் திங்கள்கிழமை கெட்டுப்பட்டியிலிருந்து தருமபுரிக்கு செல்ல நகரப்பேருந்தின் முன் படிக்கட்டில் ஏறினாராம். அப்போது, திடீரென கால் இடறி அவர் விழுந்துள்ளார். அப்போது, பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சிவகாமி சம்பவ இடத்திலேயா உயிரிழந்தார்.
விபத்துக்குறித்து தொப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.