கடையம் - தெப்பக் குளத்திற்குள் வேன் கவிழ்ந்து விபத்து
தெப்பத்தின் சுற்றுப் பாதையையும் சுவரையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பக்தர்களும் பொது மக்களும் கோயில் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டனர். இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 23-01-13 அன்றுதான் குடமுழுக்கு நடந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோயில் தெப்பக் குளத்தில் வேன் கவிழ்ந்து விழுந்தது.
கடையம் ஊரின் மேற்கு பகுதியில் இராம நதி அணைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது நித்ய கல்யாணி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும். இது தமிழ் நாடு அரசு இந்து அற நிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஆகும். இந்தக் கோயிலில் கிழக்கு வாசல் பகுதியில் ஒரு அழகான தெப்பக்குளம் உள்ளது. இதில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு தெப்பக் குளத்தின் கீழ்பக்கச் சுற்றுப்பாதை இடிந்து விழுந்தது. இதனால் இந்த ஆண்டு ஆவணி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.
கடையம் வடபத்துக் குளத்தின் பாசனத்திற்குட்பட்ட வயலுக்கு கோயிலின் வடபுறமாக உள்ள பாதை வழியே கோயிலின் கிழக்குப் புறம் வந்துதான் செல்ல வேண்டும். செவ்வாய்க் கிழமை அந்த வழியாக கடையம் கேளையாப்பிள்ளையூரைச் சேர்ந்த முருகன் என்பவர் வேனை ஓட்டிச் கோயிலின் கீழ் பக்கம் உள்ள பாதையில் செல்லும் போது எதிர்பாராத விதமாக தெப்பக் குளத்தின் கீழ் பக்கச்சுவர் சரிந்து வேனும் தெப்பத்திற்குள் கவிழ்ந்தது. இதில் முருகன் அதிர்ஷட வசமாக உயிர் தப்பினார்.