சிதம்பரத்தில் அஞ்சல்அட்டை, ஒப்புதல் அட்டை தட்டுப்பாடு!
சிதம்பரம் நகரில் உள்ள தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அஞ்சல் அட்டை மற்றும் பதிவுத்தபாலுக்கான ஒப்புதல் அட்டை (அக்னாலஜ்மெண்ட் அட்டை) கிடைக்காததால்
சிதம்பரம் நகரில் உள்ள தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அஞ்சல் அட்டை மற்றும் பதிவுத்தபாலுக்கான ஒப்புதல் அட்டை (அக்னாலஜ்மெண்ட் அட்டை) கிடைக்காததால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சிதம்பரம் நகரில் கடந்த 6 மாத காலமாக ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு தபால் அனுப்ப ஒப்புதல் அட்டை கிடைக்காததால், பொதுமக்கள் ரூ.50 பைசா அஞ்சல் அட்டையை பயன்படுத்தி வந்தனர். தற்போது கடந்த மூன்று தினங்களாக அஞ்சல் அட்டையும் கிடைக்காததால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தபால் நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் ஒப்புதல் அட்டை வெளிமார்க்கெட்டில் ரூ.1-க்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்களே ஒப்பதல் அட்டை தயாரித்து பதிவுத்தபாலுடன் இணைத்து வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தபால்துறை நிர்வாகம் சிதம்பரம் நகரில் தட்டுப்பாடாக உள்ள அஞ்சல் அட்டை, பதிவு தபாலுக்கான ஒப்புதல் அட்டை ஆகியவற்றை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.