முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆசனவாயில் 300 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னை நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை இட்ட போது, ஒரு பயணியின் ஆசன வாயில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதைக் கண்டறிந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

இலங்கையில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை இட்ட போது, ஒரு பயணியின் ஆசன வாயில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது, அவரது ஆசனவாயில் 300 கிராம் தங்கக் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 9 லட்சம் என்று தெரிகிறது. இதை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜமலுதீன் (59) என்று தெரியவந்தது. அவர், இன்று இலங்கையில்  இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானத்தில் பிற்பகல் 3.45 மணி அளவில் வந்த விமானத்தில் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.