சிலைக்கு காவலிருந்த போலீஸாரை குடிபோதையில் தாக்கிய இருவர் கைது
கிருஷ்ணகிரி அருகே சிங்காரப்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது. இதை அடுத்து போலீஸார் அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே சிங்காரப்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டது. இதை அடுத்து போலீஸார் அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நேற்று இரவு ஆயுதப் படைக் காவலராகப் பணிபுரியும் ரஜினி என்பவர் சிலைக்குக் காவலாக இருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த சக்திவேல், தனசேகரன் ஆகிய இருவரும், குடிபோதையில் காவலர் ரஜினியை தாக்கியுள்ளனர். காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சக்திவேல், தனசேகரன் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.