அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிக்கபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸார் சனிக்கிழமை இந்த
சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிக்கபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸார் சனிக்கிழமை இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.இதில் தாயில்பட்டி அருகே உள்ள எஸ்.பி.எம் தெருவை சேர்ந்த பாக்கியராஜ்(34)என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்துள்ளனர்.மேலும் பாக்கியராஜிடம் இருந்த 10ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.