முகப்பு
தற்போதைய செய்திகள்

கங்கைகொண்டான் அருகே விபத்து: 3 பேர் சாவு: பெண் உள்பட 4 பேர் காயம்

கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (45). இத் தம்பதிக்கு நயினார் என்ற மகனும், பாப்பாத்தி என்ற மகளும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் 3 பேர் இறந்தனர். பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (45). இத் தம்பதிக்கு நயினார் என்ற மகனும், பாப்பாத்தி என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில், செய்துங்கநல்லூர் அருகே உள்ள தங்களது இடத்தை அளவீடு செய்து முடிப்பதற்காக திங்கள்கிழமை காலையில் காரில் முருகன், பேச்சியம்மாள் இருவரும் புறப்பட்டனராம்.

அவர்களுடன் அதே ஊரின் கீழத்தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னமாரி (40), வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் பிச்சையா (37), பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் ராஜா (34), பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் செல்வம் (35), கண்ணையா மகன் சங்கரன் (42) ஆகியோரும் சென்றனர்.

கங்கைகொண்டான் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பெட்ரோல் பங்க் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சின்னமாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும், சிவா என்ற மகளும் உள்ளனர்.   காயமடைந்த 6 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலில் முருகன் இறந்தார். அதன்பின்பு சங்கரன் இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →