முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை அருகே நடக்கடலில் தத்தளித்த மியான்மர் நாட்டு மீனவர்கள் 3 பேர் மீட்பு

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் அருகே நடுக்கடலில் மூங்கில் படகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மியான்மர் நாட்டு மீனவர்கள் 3 பேர், காமேஸ்வரம் மீனவர்களால் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் அருகே நடுக்கடலில் மூங்கில் படகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மியான்மர் நாட்டு மீனவர்கள் 3 பேர், காமேஸ்வரம் மீனவர்களால் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.

நாகை மாவட்டம், கீழையூர் அருகே உள்ள காமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் ஓர் பைபர் படகில் மீன்பிடிப்பை முடித்து விட்டு திங்கள்கிழமை காலை திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது, வெள்ளப்பள்ளத்திலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில், நடுக்கடலில் ஓர் மூங்கில் படகும், அதில் சில மீனவர்களும் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காமேஸ்வரம் மீனவர்கள் மூங்கில் படகுக்குச் சென்று, அந்தப் படகிலிருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேரையும் தங்கள் படகில் அழைத்து வந்து, கீழையூர் கடலோரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், அவர்கள் 3 பேரும், நாகை கடலோரக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம், கடலோரக் காவல் படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதனிடையே, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள், கடலுக்குள் சென்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூங்கில் படகில் கயிறு கட்டி, விசைப் படகு மூலம் இழுத்து வந்து, வெள்ளப்பள்ளத்தில் கரையேற்றினர்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவரத்தி, உதவி கண்காணிப்பாளர் சந்தோஷ், வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் அந்தப் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இயந்திரம் இல்லாத அந்த மூங்கில் படகு மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தும் படகு என்பது தெரியவந்துள்ளது. 3 அடுக்குகளைக் கொண்டதாக இருந்த இந்தப் படகு, சுமார் 25 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாக இருந்தது.நாகை மாவட்டம், கோடியக்கரையில் மியான்மர் நாட்டுப் படகு ஒன்று ஆளில்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியிருந்தது. திங்கள்கிழமை ஓர் படகு ஆள்களுடன் மீட்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், மியான்மர் நாட்டு மூங்கில் படகுகள் லெஹர் புயல் சீற்றம் காரணமாக திசை மாறி வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →