முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் நந்தனார் சிலை வீதிவலம்

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தொன்று தொட்டு நடைபெற்று வரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை வீதிவலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தொன்று தொட்டு நடைபெற்று வரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை வீதிவலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஓமக்குளத்தில் உள்ள ஸ்ரீநந்தனார் மடத்திலிருந்து ஸ்ரீநந்தனார் சிலை ஊர்வலம் புறப்பட்டு சபாநாயகர்தெரு, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி வழியாக வீதிவலம் வந்து மீண்டும் நந்தனார் மடத்தை அடைந்தது. தெற்கு சன்னதி முகப்பில் நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஊர்வலத்திற்கான ஸ்ரீநந்தனார் மடாதிபதி பழனிவேலு, சகஜானந்தா கல்வி வளர்ச்சிக்கழக துணைச் செயலாளர் பொறியாளர் கலியமூர்த்தி, ஆசிரியர் மு.ஆ.தமிழ்க்குமரன், நந்தனார் ஆண்கள் விடுதி காப்பாளர் ப.பெருஞ்சித்திரன், செ.பேரறிவாளன், ரா.முத்தையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்த நந்தனார் ஆய்வு மையத்தினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.