தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் சரகம், நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரவிச்சந்திரன்(44 விவசாயத் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில்

மீனாட்சி

அரியலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி  செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் சரகம், நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரவிச்சந்திரன்(44 விவசாயத் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எந்த வித சமிக்ஞையும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது அவரது இருசக்கர வாகனம் மோதியதில் ரவிச்சந்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார். 

இது குறித்து ரவிச்சந்திரனின் தம்பி மதியழகன்(36)  அளித்தப் புகாரின்பேரில் கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரெங்கசாமி வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் சேலம் மாவட்டம், தலைவாசலைச் சேர்ந்த சின்னத்துரையை(33) கைது செய்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்

மன நிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் வைஸ்யா நிகர லாபம் 21% உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT