ஆம் ஆத்மி மாநில கட்சியாக அங்கீகாரம்
தில்லி சட்டசபை தேர்தலில் ஊழலை எதிர்ப்போம் என்ற கோஷத்துடன் துடைப்பம் சின்னத்துடன் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மொத்தம்
தில்லி சட்டசபை தேர்தலில் ஊழலை எதிர்ப்போம் என்ற கோஷத்துடன் துடைப்பம் சின்னத்துடன் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால் தில்லியில் விரைவில் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டுள்ள அக்கட்சி, ஆட்சியமைப்பது பற்றி தெரிவிக்க கவர்னரிடம் 10நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளது.