கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.6.80 லட்சம் செலவில் நாய் பிடிக்கும் வாகனம்
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சியில் தெருநாய்களின் தொல்லையினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாய்களை பிடிக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள்
கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சிக்கு தலா ரூ.6.80 லட்சம் செலவில் நாய் பிடிக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சியில் தெருநாய்களின் தொல்லையினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாய்களை பிடிக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். வனவதை சட்டத்தின் கீழ் நாய்களை பிடித்து கொல்லக்கூடாது. அதற்கு பதில் கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என புளுகிராஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனையடுத்து நகராட்சி நிர்வாக இயக்ககம் கடலூர் மற்றும் சிதம்பரம் நகராட்சிகளுக்கு ரூ.6.80 லட்சம் செலவில் நாய் பிடிக்கும் வாகனங்களை வழங்கியுள்ளது. இந்த வாகனம் மூலம் நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே நாய்களை விட்டுவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.