சொல்லமாட்டோம்-செய்துகாட்டுவோம்:மோடி பிரசாரம்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜக, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மோடி பேசியதாவது
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜக, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மோடி பேசியதாவது: மத்தியில் நடந்து வரும் ஆட்சியை வேரோடு அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தாயைப்போன்று பாதுகாக்கப்பட வேண்டிய கங்கை நதியை சுத்தம் செய்ய மத்தியஅரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி கங்கையில் மூழ்கிவிட்டதா? கங்கையின் பெயரை சொல்லி ஓட்டு கேட்டு மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. ஆகவே வரும்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்,
நாங்கள்( பாஜக) சொல்வதை செய்வோம் குஜராத்தில் சொன்னதை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம். பொய்யான வாக்குறுதிகளை கேட்டு மக்கள் விரக்தியில் உள்ளனர். ஆகவே வாக்குறுதிகளை கொடுக்கமால் செயலில் காட்டுவோம் என்றார்.