முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூரில் ஒருபோக விவசாயிகள் ஊர்வலம் : போராட்டம் அறிவிப்பு

அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன ஒரு போக விவசாயிகள் இன்று பெரிய அளவில் ஊர்வலம் நடத்தினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன ஒரு போக விவசாயிகள் இன்று பெரிய அளவில் ஊர்வலம் நடத்தினர்.

மேலூர் திருமங்கலம் ஒருபோக விவசாய நிலங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு நடவு நடப்பட்டுள்ளது. கதிர் வெளியே வந்த நிலையில் இங்கு ஒன்று அல்லது 2 முறை தண்ணீர் இருந்தாலே போதும் என்ற நிலையில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு அணையில் 116.80 அடியும்,  வைகை அணையில் 45.14 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. பெரியாறு பாசனப் பகுதிக்கான நீர் இருப்பு, வைகை அணையில் 664 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், வைகை பகுதி பாசனத்துக்கு 754 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், ஒரு போக சாகுபடிக்கு 4 அல்லது 5 நசாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும், உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் விவசாயிகள் அனைவரும் இன்று காலை திருமண மண்டபத்தில் கூடி போராட்டத்துக்கான முடிவை செய்தனர்.

நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்கவும், பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையிலும், மேலூர் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், பெரிய கடை வீதி வழியாக பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு கூடினர்.

நாளை போராட்டத்தில் விவசாயிகள் குடும்பத்தோடு வந்து பேங்கேற்க முடிவு செய்துள்னர்.

இது மட்டும் அல்லாமல், பெரியாறு அணையில் இருந்து பி.டி. ராஜன் பெரியாறு கால்வாய் வழியாக தேனி மாவட்ட விரிவாக்க பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தனர். விதிகளுக்கு புறம்பாக பொதுப்பணித் துறை அமைச்சர் தலையீட்டால் தண்ணீர் எடுத்துச்  செல்லப்படுவதாகவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்

முழு கட்டுரையைப் படிக்க →