மதுரை மேலூரில் விவசாயிகள் சாலைமறியல்: அதிகாரிகள் பேச்சு வார்த்தை
மதுரை மேலூரில் ஒரு போக சாகுபடி பயிர்கள் விளையும் தருணத்தில் இருந்தும் தண்ணீர் இல்லாமல் கருகுவதால் பெரியாறு வைகை அணிகளில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலூர்-மதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் தடைபட்டது.

போலீசார் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பி விட்டனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதாவது:- ஒரு போக சாகுபடி விவசாயத்துக்கு வழக்கமாக ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தண்னீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் செப்டம்பர் மாதம் 28ம் தேதி திறக்கப்பட்டது. தற்போது சாகுபடி பகுதியிலும் மழை இல்லாததால் வழக்கமாக ஒரு லட்சம் ஏக்கரில் பயிரடப்பட வேண்டிய விவசாயம் 15 ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதுவும்
தற்போது கதிர் வெளியிடும் நிலையில் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. ஒருமுறை தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நேற்று விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று மேலூர் தாலுகாவில் கடையடைப்பு கண்டன பேரணி நடந்தது. இன்று மேலூர் தாலுகாவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன பின்னர் மேலூர் பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் திறண்ட விவசாயிகள் மேலூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக புறப்பட்டு வந்தனர்
இந்நிலையில் மேலூர் 4 வழிச்சாலையில் 300க்கும்மேற்பட்ட பெண்கள் உட்பட 2000 பேர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மதுரை பிறநகர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், ஆர்.டி.ஒ. ஆறுமுகநயினார்.வட்டாட்சியர் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விவசாயிளுடனும் உயர் அதிகாரிகளுடன் 1 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.