தற்போதைய செய்திகள்

விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் சரகம், மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வருபவர் ரவி (40). சனிக்கிழமை மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்த  அதை

மீனாட்சி

செந்துறை அருகே தகராறை தட்டிக்கேட்ட விவசாயியை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் சரகம், மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வருபவர் ரவி (40). சனிக்கிழமை மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்த  அதை ஊரைச் சேர்ந்த செல்வராசு மகன் வேல்முருகன்(37), ஜெகநாதன் மகன் விமலராஜ்(38),பெரியசாமி மகன் ராமசாமி(32) ஆகிய 3 பேரும் சேர்ந்து  100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை வங்கியில் செலுத்தக் கூடாது, கையில் பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறி ரவியிடம் தகராறு செய்து தாக்கினார்களாம்.

இதனை ரவியின் உறவினரான சக்கரவர்த்தி(38) தட்டிக்கேட்டாராம்.  உடனே அவர்கள் 3 பேரும் சேர்ந்து சக்கரவர்த்தியை தாக்கினார்கள். இது குறித்து சக்கரவர்த்தி அளித்தப் புகாரின் பேரில் செந்துறை  காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ராமசாமியை கைது செய்தனர், மேலும் வேல்முருகன், மற்றும் விமலராஜை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT