சிதம்பரம் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் சாவு
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை இறந்தார்.
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை இறந்தார்.
சிதம்பரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த கவிபிரசாத் (25). ஆண்டார்முள்ளிப் பள்ளத்தைச் சேர்ந்த இவரது உறவினர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முட்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கவிபிரசாத் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி கவிபிரசாத் இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.