முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்க மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் வேண்டுகோள்

தமிழக காங்கிரஸ் வன்னியர்களை புறக்கணிப்பதால், என்.ஆர் காங்கிரஸ் கட்சியினை புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தமிழகத்தில் தொடங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் வேண்டுகோள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

தமிழக காங்கிரஸ் வன்னியர்களை புறக்கணிப்பதால், என்.ஆர் காங்கிரஸ் கட்சியினை புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தமிழகத்தில் தொடங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்மோகன்சிங் தலைமையிலான ஜனநாயக கூட்டணியும், சோனியா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சியும் தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து செயல்படுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை அரசு கொடுமைபடுத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலில் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு பதவி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் வன்னியர் சங்கத்தையும், அதன் கட்சியான உழைப்பாளர் கட்சியையும் காமராஜர் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெற்றது. எனவே வன்னியர்கள் யாரும் 2014 தேர்தலில் வன்னியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தரும் கட்சிகளுக்கு வாக்களித்து காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். புதுச்சேரியில் மறைந்த ராஜீவ்காந்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ரங்கசாமியை முதல்வர் பதவியில் அமர்த்தினார். ஆனால் தற்போது அவர் முதல்வர் பதவி வகிப்பதை பொறுக்க முடியாமல் சிலர் அவரது ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், அதிமுவுடன் கூட்டணி சேர்ந்து புதுச்சேரி மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும்.

தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்க வேண்டும். தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வளர்ந்தால் மத்தியில் ஆளும் கட்சிகள் தங்களது புதுச்சேரி அரசுக்கு எந்த கெடுதலும் செய்யாது என அறிக்கையில் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.