முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்: நினைவில் உள்ள கடலூர் மாவட்ட மீனவ கிராமங்கள்!

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினை 8 ஆண்டுகள் கடந்தும், தனது சொந்தங்கள் பேரலையில் அடித்துச் சென்று இறந்ததை, இன்றும் மறக்க முடியாமல் கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்கள் வாழ்ந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினை 8 ஆண்டுகள் கடந்தும், தனது சொந்தங்கள் பேரலையில் அடித்துச் சென்று இறந்ததை, இன்றும் மறக்க முடியாமல் கடலூர் மாவட்ட மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை தாக்கிய சுனாமி பேரலையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த 342 பேர் இறந்தனர். இதில் 93 குழந்தைகளும், 147 பெண்களும் அடங்குவர். சுனாமி பேரலையால் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடலோரத்தில் உள்ள இருந்த அழகிய தீவுகளான பில்லுமேடு, சின்னவாய்க்கால், எம்ஜிஆர் திட்டு ஆகியவை இருக்கும் இடம் தெரியாமல் போனது.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமிப் பேரலையில் 648 பேர் இறந்தனர். உறவுகள், உடைமைகள், வீடுகளை இழந்து 20 ஆயிரம் குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. 1500 ஹெக்டேர் நிலங்களில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறியது. 608 ஹெக்டரில் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் அப்போதைய ஆட்சியர்களாக இருந்த ககன்தீப்சிங்பேடி, ராஜேந்திரரத்னூ ஆகியோரின் சீரிய முயற்சியால் சுனாமி பாதித்த கிராமங்களில் நிரந்த குடியிருப்பு வீடுகள் கட்ட அரசால் 115 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மீனவ குட்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சுனாமி பேரழிவில் மிகுந்த பாதிப்படைந்து அதிர்ச்சியில் இருந்த மீனவ மக்கள் தற்போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்பிசுள்ளனர். இருப்பினும் தங்களது குடும்பத்தினரை இழந்ததை மறக்க முடியாமல் நினைவு தினத்தன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்டு வேதனையளிக்கிறது. மேலும் சுனாமி பேரலையின் பயம் மீனவர்கள் மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.