முகப்பு
தற்போதைய செய்திகள்

வங்க தேசத்தில் தொடரும் வன்முறை; இரண்டு பேர் கொலை

வங்க தேசத்தில் எதிர்கட்சியான வங்க தேச தேசிய வாத கட்சி.  அரசுக்கு எதிராக 83 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வங்கதேச எதிர்கட்சித் தலைவர் அப்துல் காதர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக  மோதலில் கடந்த வாரம் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 83 மணி நேர முழு அடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் பேருந்து ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது.

இதில் ஒரு போலீஸ்கார்ர் தீயில் சிக்கி உயிரிழந்தார். இதே போல் ஆவாமி கட்சி தலைவர் ஒருவர் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டார். மேலும் பல இடங்களில் போலீசாருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த மோதலை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வன்முறையில் 120 பேர் கொல்லப்ட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →