பீகார்: ஷேர் ஆட்டோ மீது மினிலாரி மோதி விபத்து: 4பேர் பலி
பீகார் மாநிலம் ஹஜிப்பூர் அருகே 8 பயணிகளுடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. தனுஷி என்ற கிராமத்தின் அருகே ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி
பீகார் மாநிலம் ஹஜிப்பூர் அருகே 8 பயணிகளுடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. தனுஷி என்ற கிராமத்தின் அருகே ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பலத்த காயமடைந்தனர். இதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உளளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபந்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.