முகப்பு
தற்போதைய செய்திகள்

தெற்கு சூடானில் வன்முறையால் 1,20,000 பேர் வெளியேற்றம்:இன்று அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

தெற்கு சூடானில் அதிபர் சால்வா கீருக்கு எதிராக  கடந்த  இரண்டு வாரங்களுக்கு மன் கிளர்ச்சி எழுந்தது. ராணுவத்தினருக்கும்  முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தெற்கு சூடானில் அதிபர் சால்வா கீருக்கு எதிராக  தலைநகர் ஜூபாவில் கடந்த  இரண்டு வாரங்களுக்குமுன் கிளர்ச்சி எழுந்தது. ராணுவத்தினருக்கும்  முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் தொடர் வன்முறையில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,20,000.மக்கள்  வெளியேறி முகாமில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் பெரும் உயிரிழப்புக்களுக்குப் பின்னர் இன்று  தென் சூடான் அதிபர் சால்வா கீர் தனது அண்டை நாடுகளான கென்யா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளின் ஆதரவுடன்  கென்யா தலைநகர் நைரேபியில் இன்று  சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்.

முன்னால் அதிபர் ரியெக் மாச்சர் உம் சண்டையை நிறுத்துவதற்கு முன் வந்துள்ள போதும் அதிபர் கீர் ஓர்  பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் மிகச் சமீபத்தில் உருவான நாடான தென் சூடானில் இந்த வன்முறைகளால் உள்நாட்டுப் போர் மூளும் அச்சம் தோன்றியதால் அந்நாட்டு அரசு இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.