சிதம்பரத்தில் ஜி.கே.வாசன் பிறந்தாள்: மூப்பனார் பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள்
சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை மூப்பனார் பேரவை சார்பில் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை மூப்பனார் பேரவை சார்பில் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம். இதனையடுத்து ஏழை மக்கலுக்கு வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். பேரவை பொதுச்செயலாளர் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றார். மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார், நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆர்.வி.சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.புரட்சிமணி நிகழ்ச்சியில் பங்கேற்று ஏழை மக்களுக்கு பொங்கல் பானை மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் பிறந்தநாள் கேக் வெட்டினார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் கட்டாரி சந்திரேசகர், மாவட்ட பொதுச்செயலாளர் பாபு ஆர்.எஸல்.சந்திரசேகர், மாவட்ட துணைத் தலைவர் கே.ஜி.குமார், ராஜா.சம்பத்குமார், சம்பந்தமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவர் கே.ராஜலட்சுமி, நிர்வாகிகள் கே.தில்லைச்செல்வி, ஐ.பூமா,சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயில், மேலவீதியில் உள்ள சிறை மீட்ட விநாயகர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. சிதம்பரம் மந்தகரையில் நகர பொதுச்செயலாளர் கட்டாரி சந்திரசேகர் தலைமையில் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். ஆட்டோ டி.குமார் நன்றி கூறினார்.